Thursday, 16 April 2026

KLIA-வில் மேற்கொள்ளப்படும் சூரிய ஒளிமின்னழுத்தியத் தோட்டம் மற்றும் ஆற்றல் சேமிப்பு மின்கல அமைப்புத் திட்டம்!

KLIA-வில் மேற்கொள்ளப்படும் சூரிய ஒளிமின்னழுத்தியத் தோட்டம் மற்றும் ஆற்றல் சேமிப்பு மின்கல அமைப்புத் திட்டம்!

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பயனுக்காக அது மேற்கொள்ளப்படுவதாக, ஆற்றல் மாற்ற-நீர்வள உருமாற்ற அமைச்சருமான DATUK SERI FADILLAH YUSOF விவரித்தார்.

நாட்டின் ஆற்றல் மாற்றத் துறையை நிலையான, நடப்புச் சூழலுக்கு ஏற்ற, பேரளவிலான வகையில் உருமாற்றும் நடவடிக்கையில், சூரிய ஒளியில் இருந்து நேரடியாக மின்சாரத்தை உருவாக்கும் இந்தத் திட்டம் முக்கியமானது.

அந்தத் திட்டம் முழுமையடைந்தவுடன், மணிக்கு 46

gigawatt மின்சாரத்தை KLIA பயனீட்டுக்கான உற்பத்தி செய்ய இயலும்.

இதன்வழி, ஆண்டுக்கு 35 ஆயிரம் டன் கரிவளி வெளியேற்றத்தைக் குறைக்க இயலும் எனக் கணிக்கப்படுவதாகத் துணைப்பிரதமர் தெரிவித்தார்.

புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் துறையில் இது முக்கிய அடைவுநிலை.

மின் பகிர்மானத்தைச் சிக்கனமாக்குவதன் வழி, செலவுகளைக் குறைக்க இயலும் என்பதுடன்,

நாட்டின் பொருளாதாரத்தைப் போட்டித்தன்மை உடையதாகவும் நிலைக்கச் செய்ய இயலும் என, DATUK SERI FADILLAH குறிப்பிட்டார். admin:sabthamstv