Thursday, 16 April 2026

275 கோடி ரிங்கிட் மதிப்பிலான அந்நிய முதலீடுகளைப் பதிவு செய்துள்ளது மலேசிய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் FINAS.

KUALA LUMPUR,FEBRUARY 11

2013 முதல் கடந்தாண்டு வரையில், திரைப்பட தயாரிப்பு ஊக்கத்தொகை வாயிலாக அந்த முதலீடுகள் கரவப்பட்டதாக தொடர்பு துணையமைச்சர் TEO NIE CHING சொன்னார்.

அந்த முதலீடுகளின் வாயிலாக இதுவரை 31 ஆயிரத்து 50 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக ,தொழில்நுட்ப, உயிர்கேலிச் சித்திரம் ANIMATION, திரைப்பட தயாரிப்பு சார்ந்த TVET துறையினர் பலர் இதில் பயனடைந்தனர்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் மலேசியாவில் திரைப்பட தயாரிப்புகளின் ஈடுப்பட்டுள்ள முதன்மை முதலீட்டு நாடுகளாக விளங்குவதை TEO சுட்டினார்.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட TRANSFORMERS CYBER WORLD உயிர்கேலிச் சித்திர திரைப்படம், LORD OF THE FLIES நாடகம்,

SURVIVAL SERIES EUROPE, TEMPTING FORTUNE போன்ற நிகழ்ச்சிகள் உள்நாட்டு திரைத்துறையை மிளிரச்செய்தன.

இன்று மக்களவையில் கேள்வி பதில் அங்கத்தின் போது, TEO இந்த விவரங்களை வெளியிட்டார்.admin:sabthamstv