Thursday, 16 April 2026

அயல்நாட்டுச் சுற்றுப்பயணிகளிடம், விருந்தோம்பலையும் கனிவையும் பேணுவீர்

கோலாலம்பூர், ஜனவரி 1

2026 மலேசிய வருகை ஆண்டில் அந்தப் பண்புகளைக் கடைபிடிக்குமாறு, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் DATUK SERI TIONG KING SING மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் மீது நற்தோற்றத்தை உண்டாக்கும் பொறுப்பு, குடிமக்களுக்கும் உண்டு.

சுற்றுச் சூழல் தூய்மையைப் பேணுவதிலும், சுற்றுப்பயணிகளைக் கனிவுடன் வரவேற்பதிலும் அவர்களுக்குப் பங்குண்டு என அமைச்சர் நினைவூட்டினார்.

சுற்றுப்பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும்படி, தொடர்புடைய தரப்புகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

KLIA முதலாம முனையத்தில் அனைத்துலகப் பயணிகளை வரவேற்ற பின், DATUK SERI TIONG, ஊடகத்தாரிடம் பேசினார்.

மலேசிய வருகை ஆண்டின் பொம்மல்களான (MASCOT) WIRA-வும் MANJA-வும் அங்கிருந்தன.

மலேசிய வருகை ஆண்டு இயக்கத்தை ஒட்டி நிகழ்ச்சிகளை மேற்கொள்ள, சுற்றுலா-கலை-பண்பாட்டு அமைச்சு பல்வேறு மானியங்களை ஏற்படுத்தியுள்ளது.

பண்பாடு, சுற்றுலாத் திட்டங்கள், கைவினை நடவடிக்கைகள் ஆகியவற்றை அது உட்படுத்தியிருப்பதாக துணையமைச்சர் Chiew Choon Man தெரிவித்தார்.

சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, மலேசியர்களை ஊக்குவிக்கும் வகையில் இது அமைகிறது.

2026 மலேசிய வருகை ஆண்டை ஒட்டி, பல்வேறு பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட முன்னூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள்,

சரவாக்கின் 55 முதன்மை வாயில்களில் நடத்தப்படவுள்ளதாக, Chiew குறிப்பிட்டார்.admin -sabthamstv.