Thursday, 16 April 2026

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, இலவச KOMUTER ரயில் சேவை வழங்குகிறது, KERETAPI TANAH MELAYU BERHAD, KTMB..

Kuala Lumpur,Jan 21

அடுத்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள தைப்பூசத்தை ஒட்டி பத்துமலைத் திருத்தலத்தில் ஏறத்தாழ 25 லட்சம் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கூடுவர் எனக் கணிக்கப்படுகிறது.

அவர்களின் நடமாட்டத்தை எளிதுப்படுத்துவதற்கும் சீர்ப்படுத்துவதற்கும் அந்த முன்னெடுப்பு கையாளப்படுவதாக அமைச்சர் விவரித்தார்.

ஜனவரி 31 , நள்ளிரவு 12 மணி தொடங்கி பிப்ரவரி ஒன்று முன்னிரவு 11.59 மணி வரையில் அந்த கட்டணமில்லாச் சேவை வழங்கப்படுகிறது.

அதற்கான செலவு பத்து லட்சம் ரிங்கிட்டை எட்டுகிறது.

மொத்தமாக 609 பயணங்கள் கையாளப்படும் என அவர் கூறினார்.

KL SENTRAL-லில் 2026 தைப்பூசத்திருநாளை முன்னிட்டு KTM KOMUTER ரயில் சேவை தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகத்தார் சந்திப்பில் அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.

அந்த கால கட்டத்தில் 28 KTMB நிலையங்கள் முழு வீச்சில் இயங்கும் என KOMUTER சேவைப்பிரிவு நிர்வாகி, கலைச் செல்வன் சந்திரன் இவ்வேளையில் தெரிவித்தார்.

அதனைத் தவிர, RAPID KL மற்றும் RAPID PENANG வாயிலாக PRASARANA MALAYSIA நிறுவனம் இலவச SHUTTLE பேருந்து சேவையை கோலாலம்பூரிலும் பினாங்கிலும் வழங்குகிறது.

மேலும் பினாங்கில் ஜனவரி 31 தொடங்கி 51 மணிநேரத்திற்கு இலவச FERI பயணப்படகு சேவையும் இயங்கும்.admin:sabthamstv