Thursday, 16 April 2026

பொருளக வட்டி விகிதம், 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் ஜன.22 - 

பேங்க் நெகாராவின் நிதியியல் கொள்கைக் குழு, 2026 முதல் கூட்டத்தில், அந்த முடிவை எட்டியது. 

2.75 விழுக்காடு எனும் நடப்பு வட்டி விகிதம் ஏற்புடையது என, MPC கருதுகிறது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு அது ஊக்கமளிப்பதுடன், நிலையான சந்தை விலையையும் அது உறுதி செய்கிறது.

2025-இல் மலேசியப் பொருளாதார வளர்ச்சி, 4 முதல் 4.8 விழுக்காடாக இருந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

போட்டியாற்றல் மிக்க உள்நாட்டுத் தேவை, அந்த வளர்ச்சி உந்துதலை இவ்வாண்டும் தொடரச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ADMIN:SABTHAMSTV