Thursday, 16 April 2026

2026 சீனப் புத்தாண்டு Ops Selamat நடவடிக்கை, வரும் 15-ஆம் நாள் தொடங்குகிறது.

Kuala Lumpur February 10

ஆறு நாள்களுக்கு அது செயல்படுத்தப்படும் என, அரச மலேசிய போலீஸ்படையின்,

போக்குவரத்துச் செயலாக்க, புலனாய்வுத் துறை செயலாக்க துணை இயக்குநர் Superintenden Khairul Azhar Ismail தெரிவித்தார்.

2026 சீனப் புத்தாண்டு OPS SELAMAT நடவடிக்கை, சாலை விபத்துகளையும் குற்றங்களையும் தடுப்பதில் கவனம் செலுத்தும்.

செயலாக்கம் தவிர, சுய மற்றும் குடும்பத்தார், சொத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே மேம்படுத்துவதில், OPS SELAMAT நுண்ணோக்கும்.

விடுமுறை கால பாதுகாப்பு என்பது போக்குவரத்தைச் சார்ந்தது மட்டுமன்று.

வீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இதில் வலியுறுத்தப்படுவதாக, Superintenden Khairul விவரித்தார்.admin:Sabthamstv