Thursday, 16 April 2026

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவன பயிற்றுநர்களின்,மிகுந்த மனநிறைவு தெரிவித்துள்ளன.

KUALA LUMPUR FEBRUARY 11.

தொழிற்கல்வி மற்றும் நுட்ப பயிற்சி பட்டதாரிகளின் தரம் தொழில்துறை தரநிலைகளை பூர்த்தி செய்துள்ளதை மனிதவள துணையமைச்சர் DATUK KHAIRUL FIRDAUS AKBAR KHAN சுட்டினார்.

TVET பட்டதாரிகளின் திறன்கள், வேலை சந்தை தேவை மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சம்பள அமைப்புக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

97,2 விழுக்காட்டு நிறுவனங்கள் பயிற்றுநர்களின் ஆற்றல் குறித்து மனநிறைவு தெரிவித்து இருப்பதாக DATUK KHAIRUL FIRDAUS குறிப்பிட்டார்.

TVET துறைகளின் கீழ் கட்டமைக்கப்பட்ட பயிற்சி உள்ளடக்கத்தை வடிவமைப்பதில் அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கு இடையிலான வியூக ஒத்துழைப்பின் செயல்திறனை இது பிரதிபலிக்கிறது என்றாரவர்.admin:sabthamstv