Sunday, 8 November 2026

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்த மலேசியா திட்டம்

கோலாலம்பூர், அக்டோபர் 21 – மலேசியாவின் பிந்தைய தயாரிப்புத் துறையை (Post-Production) மேம்படுத்தவும், உள்ளூர் கலைஞர்களுக்கு சர்வதேச திரைப்படத் தயாரிப்புகளில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒத்துழைக்க மலேசியா திட்டமிட்டுள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் இதனைத் தெரிவித்ததுடன், ஜகார்த்தாவில் நெட்ஃபிளிக்ஸ் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் தொழில்முறைப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் கூறினார்.

மேலும், மலேசியத் திரைப்படங்கள், அனிமேஷன்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை (IP) சர்வதேசச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டன.

இதற்கிடையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கோலாலம்பூரில் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FINAS) புதிய அலுவலகத்தைப் பார்வையிட்டு, பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து ஆராய ஒப்புக்கொண்டுள்ளது.admin@sabthamsTV