Kuala Lumpur, 5 January
18 வயது நிரம்பிய மலேசியர்கள் அனைவரின் MYKAD-இல், பிப்ரவரி 9-ஆம் தேதி அந்தத் தொகை சேர்க்கப்படும் என நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.
மலேசியர்கள் 22 லட்சம் பேர் அந்த 100 ரிங்கிட் SARA தொகையைப் பெறுவர்.
சீனப் புத்தாண்டு, நோன்பு மாதத் தொடக்கம் ஆகியவற்றை முன்னிட்டு, மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவி நல்கப்படுகிறது.
வறிய நிலையில் உள்ளோருக்கு வழங்கப்படும் மாதாந்திர SARA உதவித்தொகை,முன்கூட்டியே, இம்மாதம் 9-ஆம் நாள் உரியவர் வசம் சேர்க்கப்படும்.
அத்துடன், இவ்வாண்டுக்கான RAHMAH ரொக்க உதவி-STR, முதல் கட்ட தொகையாக 500 ரிங்கிட், இம்மாதம் 20-ஆம் நாள், தகுதியுடையோர் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.admin :sabthamstv