Thursday, 16 April 2026

நாட்டின் பொருளாதாரம் சரியான தடத்தில் இருப்பதை உறுதி செய்வது!

மக்களின் வாழ்க்கைச் செலவின விவகாரத்துக்குத் தீர்வு காண்பது!

மதானி அரசு முன்னெடுக்கும் தலையாய விவகாரங்கள் என, தொடர்பு அமைச்சர் DATUK FAHMI FADZIL தெரிவித்தார்.

வர்த்தகம் மேற்கொள்வதை எளிதாக்குவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.

நாட்டில் வர்த்தக நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட அதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.

வசதிகளும் பெருக்கப்பட வேண்டும் என, அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அது பங்களிக்கும்.

பொருளாதாரத்தை வளமாக்குவதன் வழி கிட்டும் வருமானத்தை மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த இயலும் என்றும் அவர் கூறினார்.

மதானி அரசு நிகராளிகள் சந்திப்புக்குப் பின், அரசாங்கப் பேச்சாளருமான DATUK FAHMI ஊடகத்தாரைச் சந்தித்தார்.admin. :sabthamstv.