பூமிபுத்ராக்களுக்கான கடனுதவி அதிகரிக்கப்படுகிறது.
இந்தியத் தொழில்முனைவோருக்கான உதவிநிதியும் கூட்டப்படுகிறது.
சீன தொழில்முனைவோருக்கும் அதிக நிதி.
தொழில்முனைவோர் மேம்பாடு-கூட்டுறவு அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் STEVEN SIM, முதல் நாளில், அந்த மகிழ்ச்சி செய்தியை அறிவித்தார். இன பாகுபாடின்றி, குறு-சிறு நடுத்தர தொழில்முனைவோரின் வளர்ச்சியை உந்தச் செய்யும் அரசின் கொள்கை இதுவென, அமைச்சர் தெரிவித்தார்.
TEKUN NASIONAL கீழ், பூமிபுத்ராவுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு , 30 கோடி ரிங்கிட்டிலிருந்து 50 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.
SPUMI திட்டத்தின் வாயிலாக, இந்திய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட மூன்று கோடி ரிங்கிட் நிதியுதவி, அடுத்தாண்டு தொடங்கி, ஐந்து கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கப்படுகிறது.
சீன குறு-சிறு நடுத்தர தொழில்முனைவோருக்கென புதிய திட்டம், அடுத்தாண்டு அறிமுகம் காணவுள்ள நிலையில்,
அதற்காக, ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக, அவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட்ட சிறு-குறு நடுத்தர தொழில்முனைவோருக்கு, ஆறு மாதங்கள் பொருளகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் திட்டமும் செயலாக்கப்படும்.
மலேசிய கூட்டுறவு ஆணையம், SME CORP MALAYSIA, TEKUN NASIONAL, BANK RAKYAT பொருளகம், SME BANK, உட்பட, தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாடு அமைச்சின் கீழ் செயல்படும் ஏழு நிறுவனங்களிடன் கடன் பெற்றவர்களுக்கு அந்த விலக்கு அளிக்கப்படும் என, STEVEN SIM விவரித்தார்.