Thursday, 16 April 2026

சாரா உதவித் திட்டக் கட்டமைப்பை விரிவுபடுத்தும், சிறந்த அணுகுமுறைகளை அரசு தொடர்ந்து கண்டறிந்து வருகிறது.

Kuala Lumpur,17 January

வசதி குறைந்தோருக்கு உதவும் இலக்கு எட்டப்படுவதை அஃது உறுதி செய்யும் என, இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் அம்சா அசிசான் தெரிவித்தார்.

SARA உதவித் திட்டத்தின் கீழ், சிறிய கடைகளை இணைக்கவும் அரசு முனைகிறது.

அன்றாடத் தேவைகான பொருள்களை, மக்கள் எளிதில் பெறும் வகையில், அரசு, அந்தக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதாக, அமைச்சர் கூறினார்.

அதேவேளை, சாரா உதவித் திட்டத்தின் கீழ் வாங்கக் கூடிய பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளபப்டுகிறது.

உள்நாட்டு தயாரிப்புகள் உட்பட பல்வேறு தேர்வுகள் மக்களுக்கு அதில் வழங்கப்படும்.

அடிப்படை பொருள்கள் மட்டுமே வாங்கக்கூடிய வகையில் சாரா திட்டம் கட்டமைக்கப்பட்ட நிலையில், இப்போது பற்பசை உள்ளிட்ட பொருள்களையும் மக்கள் வாங்க இயலும் என்பதை அவர் சுட்டினார்.

கிள்ளான், புக்கிட் கூடா பெண்கள் தேசிய இடைநிலைப் பள்ளியில், மைபிளஸ் சமூக நாள் திட்டத்தைத் தொடக்கிவைத்த பின், டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா செய்தியாளரிடம் பேசினார்.admin:sabthamstv