Kuala Lumpur,17 Jan,
கருவூலத் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூட் மெரிக்கான் அதனை உறுதிபடுத்தினார்.
ஜனவரி 9-ஆம் நாள் அந்தத் தொகை தக்கார் அடையாள அட்டையில் சேர்க்கப்பட்டது.
முதல் ஐந்து நாள்களில், 62 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்பட்டிருக்கிறது.
சபாவிலும், லாபுவானிலும் மிக அதிகமாக 36 விழுக்காடு செலவிடப்பட்டிருப்பதாக டத்தோ ஜோஹான் மஹ்முட் கூறினார்.
அதேவேளை, மிகக் குறைவாக, கோலாலம்பூரில் 21 விழுக்காட்டினர் மட்டுமே, அந்த உதவியைப் பயன்படுத்தினர்.
உதவிப் பெறுவோர் மட்டுமல்லாது, சாரா திட்டத்தில் பங்கெடுத்துள்ள வணிகர்களும், பலன் பெறுகின்றனர்.
ஆக்கரக போட்டியின் வாயிலாக அவர்கள் வருமானத்தைப் பெருக்குகின்றனர்.
தகுதியுடைய அனைவரும் சாரா உதவித் திட்டத்தில் பயனுறுவதை உறுதி செய்ய, கருவூல அதிகாரிகள், களப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
சமூக நலத் துறை, பூர்வகுடி முன்னேற்றத் துறை போன்ற தொடர்புடைய நிறுவனங்களுடன், தகவல் சரிபார்ப்புப் பணிகளை அவர்கள் மேற்கொள்வதாக, டத்தோ ஜோஹான் மஹ்முட் விவரித்தார். admin:sabthamstv