SUNGAI BULOH,17 JANUARY
வாழ் மாணாக்கருக்கு ரொக்கமும் பள்ளி உபகரணங்களையும் எடுத்து வழங்கினார், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷணன்
கடந்தாண்டு தொடங்கி இதுவரை சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி வாழ் மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு 12 இலட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டினார்.
இதில் குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தி, இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதே இந்த முனைப்பின் முக்கிய நோக்கம் என டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.
அப்பகுதி வாழ் மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக இன்னும் பல முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டையும் சுங்கை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வெளிப்படுத்தினார்.admin:sabthamstv