Kuala Lumpur,Jan 21
மாணாக்கர் 6 வயதில் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது இன்னமும் கட்டாயமாக்கப்படவில்லை.
பெற்றோர் மட்டுமல்லாது, தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் புதியக் கல்வி சூழலுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள ஏதுவாக, இந்தக் கால வரையறை வழங்கப்படுகிறது.
நாட்டின் அதிகாரப்படியான கல்வி முறையில் மாணாக்கர் நுழைவு வயது மறுச் சீரமைக்கபப்ட்டிருப்பதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைகிறது.
பள்ளிச் சூழலுக்குள் மாணாக்கர் அடியெடுத்து வைக்கும் முன், அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை இது ஏற்படுத்தும்.
அவ்வகையில், நாட்டின் பாலர் பள்ளி முறை, இனி கல்வி அமைச்சின் கீழ் முழுமையாக இயங்கும்.
நாடு முழுவதும் தரமான, ஒருங்கிணைந்த செயலாக்கத்தை இது உறுதி செய்யும் என, பிரதமர் கூறினார்.
அதேவேளை, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அறைகளை தரமுயர்த்தும் பொருட்டு பத்து கோடி ரிங்கிட்டை ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
2026-2035 தேசியக் கல்வித் திட்டத்தில், மலாய் மொழியை வலுப்படுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தேசிய மொழியை மாண்புறச் செய்யும் வகையில், இது மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் விவரித்தார்.
அதேவேளை, ஏனைய மொழிகள் மீதான ஆளுகைக்கும் கவனம் செலுத்தப்படும்.
எல்லா தேசிய பள்ளிகளிலும், தமிழ், சீனம், அரபு மொழிகளைப் போதிப்பதற்குப் போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என அவர் கூறினார்.
பள்ளிகளில் ஆசியர்களுக்கான வசதிகளைச் சீரமைக்க, 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டையும் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.
இவ்வேளையில், நாட்டிலுள்ள எல்லா பள்ளிகளிலும், மலாய் மொழிக் கல்வியும், மலேசிய வரலாறு பாடமும் கட்டாயமாக்கப்படுவதாகப் பிரதமர் அறிவித்தார்.
மலேசியாவில் இயங்கும் அனைத்துலகப் பள்ளிகள், சமயப் பள்ளிகள், UEC-ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் பள்ளிகள் ஆகியவை, SPM தேர்வில் மலாய் மொழிப் பாடத்தையும் வரலாறு பாடத்தையும் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, U-E-C தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அனைவரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.admin:sabthamstv