கோலாலம்பூர், டிச 19, மின்னியல் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க, எரிபொருள் உதவித் தொகையை ரொக்கமாக வழங்க அரசு உத்தேசிக்கவில்லை.
அது BUDI-95 திட்டத்தின் உண்மை நோக்கத்தை மடைமாற்றிவிடும் என, இரண்டாம் நிதியமைச்சர் மேலவையில் தெளிவுபடுத்தினார்.DATUK SERI AMIR HAMZAH AZIZAN,
நாட்டின் பெரும்பான்மை மக்கள், எரிபொருள்சார் வாகனங்களைச் சார்ந்திருக்கின்றனர்.
எனவே, ரொக்க முறையில் எரிபொருள் உதவித் தொகை வழங்கப்பட்டால், அவர்களின் நலன் பேண தோற்றுவிக்கப்பட்ட BUDI-95 செயலாக்கம் பாதிக்கப்படும்.
குறிப்பாக, மொத்த உதவித் தொகைக்கு மாற்றாக இலக்கிடப்பட்ட உதவித் தொகை எனும் முதன்மை நோக்கம் மாறிவிடும் என, அமைச்சர் விளக்கினார்.
மின்னியல் வாகனப் பயன்பாட்டை BUDI-95 ஊக்குவிக்கிறதா என, SENATOR DR LINGESHWARAN R. ARUNASALAM வினவியதற்கு, அவர் பதிலுரைத்தார்.
பயனீட்டாளர்கள், மின்னியல் வாகனத்துக்கு மாற BUDI95 திட்டம் ஒருபோதும் உந்துதல் அளிக்கவில்லை என, DATUK SERI AMIR HAMZAH, திடமாகக் கூறினார்.
இவ்வேளையில், 2025 டிசம்பர் தரவுபடி, நாட்டில் பதிவு பெற்ற ஒரு லட்சத்து 64 ஆயிரம் பயணிகள்-சரக்கு போக்குவரத்து-E-HAILING தொழிலாளர்களில், ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர், அதாவது 65 விழுக்காடினர், BUDI 95 திட்டத்தில் பதிந்துள்ளனர்.
அவர்கள், 600 லிட்டர் முதல் 800 லிட்டர் வரை RON-95 ரக பெட்ரோலைக் கொள்முதல் செய்ய தகுதி பெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஓட்டுநர் பயணம் செய்யும் தொலைவை, தொடர்புடைய நிறுவனம் முடிவு செய்யும் வேளை,அவர்களின் தரவு சரிபார்ப்பை, APAD மேற்கொள்கிறது.
மலேசிய குடியுரிமையும், PSV உரிமமும் கொண்டிருக்கும் ஓட்டுநர் மட்டுமே, அந்தத் திட்டத்தில் அனுகூலம் பெற ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
உதவித் தொகை விரயத்தைத் தவிர்க்கவும், இயங்காத ஓட்டுநர் அனுமதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், ஒவ்வொரு மாதமும் ஓட்டுநர் பயண தொலைவு தரவு பதிவு செய்யப்படுவதாக DATUK SERI AMIR HAMZAH விவரித்தார்.Admin -SabthamsTV