கோலாலம்பூர் ஜன 22 -
உரிமம் பெற, சமூக ஊடகங்கள் பயனர் 80 இலட்சம் பேரைக் கொண்டிருத்தல் வேண்டும் என வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை வரம்பு மீளாய்வு செய்யப்படும்!
நடைமுறை விவகாரங்கள் சிலவற்றைக் கருத்தில் இருத்தி அது மேற்கொள்ளப்படுவதாகத் தொடர்பு அமைச்சர் DATUK FAHMI FADZIL அவையில் தெரிவித்தார்.
X சமூக வலைத்தளம், grok செயற்கை நுண்ணறிவுச் செயலி ஆகியவற்றின் உள்ளீடுகள் முடக்கப்பட்டதை அடுத்து, துல்லிய சமூக ஊடகப் பயனர் எண்ணிக்கையைக் கண்டறியும் மேளாய்வு மேற்கொள்ளப்படுவதாக, அமைச்சர் விளக்கினார்.
சமூக வலைத்தளங்களில் முறைகேடுகளைக் கையாள கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கை முழுமையாகக் கையாளப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு ஆகியவை ஒருங்கிணைந்த சேவையை வழங்கும் நிலையில், சிக்கல்கள் எழுவதை, அவர் சுட்டினார்.
பயனர் 80 இலட்சம் பேரைக் கொண்டிருக்கவில்லை என x வலைத்தளம் கூறிய நிலையில், அதற்கு உரிமம் வழங்கப்படாது.
இது போன்ற சிக்கல் எழுவதை, அரசும் தொடர்பு பல்லூடக ஆணையமும் உணர்ந்திருக்கின்றன.
எனவே, பயனர் 80 இலட்சம் பேரை உடைய சமூக வலைத்தளங்களுக்கு உரிமம் வழங்க, அதன் வரையறை வரம்பு மீண்டும் ஆராயப்படும் என DATUK FAHMI கோடிகாட்டினார்.ADMIN:SABTHAMSTV