Thursday, 16 April 2026

ஆக்ககரமான பொருளாதார வளர்ச்சி, ரிங்கிட்டின் நிலையையும் மதிப்பையும் வலுப்படுத்தியுள்ளது.

அத்துடன், பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் உயர்த்தியிருப்பதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

 அமைச்சர்கள் கேள்வி நேரத்தில் DATUK DR KU ABD RAHMAN KU ISMAIL-இன் வினாவுக்குப் பிரதமர் விடை பகன்றார்.

ரிங்கிட் வலுப்பெற்றிருப்பது, நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதியைப் பாதிக்கவில்லை.

அதேவேளை, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

எல்லா நாடுகளுமே, தங்கள் நாணயம் வலுப்பெற வேண்டும் என எண்ணுவது வழமையே.

அவ்வகையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெற்றிருப்பது நாட்டுக்கு நன்மையையே கொண்டுவரும் என, நிதியமைசருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். Admin:sabthamstv