KUALA LUMPUR 29 JANUARY
தற்காப்புத் துறையின் நிர்வாக-நடவடிக்கை அறிக்கை ஒவ்வொன்றிலும், அந்தக் கொள்கை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அதிகார முறைகேடு, ஊழல் போன்ற நடப்புச் சவால்கள், தற்காப்புத் துறை கழகங்களின் நற்தோற்றத்துக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றன.
எனவே, நேர்மை தவறிய செயல்களில் தயைக் காட்டப்படக் கூடாது என, பிரதமர் வலியுறுத்தினார்.
மலேசிய ஆயுதப்படையின் மானத்தை மீட்பதில், பலவீனத்தைக் களைந்து, வெளிப்படைத்தன்மை, நேர்மை, துணிச்சல் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தரைப்படைப் புதிய தளபதி, JENERAL DATUK AZHAN MD OTHMAN-இன் மரியாதை நிமித்த வருகையை எதிர்கொண்ட பின், டத்தோஸ்ரீ அன்வார், சமூக ஊடகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்காப்பு அரணாகவும், மக்கள் அனைவரின் நம்பிக்கைக்கான ஆதரவாகவும் விளங்க வேண்டிய தரைப்படையின் வியூகப் பங்களிப்பு குறித்து, அந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
ஆற்றல், நிபுணத்துவம், மதிப்பு ஆகியவை நிறைந்த படையாக, தரைப்படையை நிலைக்கச் செய்யும் முயற்சியை, மதானி அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
அதேவேளை, அதிகாரிகள், உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினர், முன்னா: இராணுவத்தினர் நலனைப் பேணுவதிலும் உரிய கவனம் செலுத்தப்படும் என, டத்தோஸ்ரீ அன்வார் உறுதியளித்தார். admin:sabthamstv