Thursday, 16 April 2026

உயர்நெறி பிறழ்ந்தால், மக்களின், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்

Kuala Lumpur, 29 January

உயர்நெறி தொடர்பான விவகாரங்களை, எல்லா தரப்புகளும், நினைவில் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை, மதிப்பு, நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான வெற்றி ஆகியவற்றின் அடித்தளமாக அது விளங்குவதைத் துணைப்பிரதமர் சுட்டினார்.

மக்களுக்கான திட்டங்களையும் நாட்டின் மேம்பாட்டையும் ஆக்ககரமான வகையில் செயல்படுத்துவதில், உயர்நெறி முக்கிய பங்காற்றுகிறது.

 

நாடு ஊழலில் இருந்து விடுபட்டு, உயர்நெறியில் கோலோச்ச வேண்டும்.

அதன் வாயிலாகக் கிட்டும் மதிப்பு, முதலீடுகளை ஈர்த்து, நாட்டின் மேம்பாட்டுக்கு வழிகோலும் என, அவர் விவரித்தார்.

செயலாக்கங்களில் காணப்படும் பலவீனங்களைக் கண்டு, அரசு இனியும் வளாவிருக்காது என்றும்,

உடனடியாக அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியது தொடர்பில், Datuk Seri Fadillah கருத்துரைத்தார்.admin:sabthamstv