செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வகுப்பறை!
கோலாலம்பூர், டிச 19,
அடுத்த ஆண்டு, 260 பள்ளிகளில், அந்தத் திட்டத்தைக் கட்டம் கட்டமாக விரிவுப்படுத்த, கல்வி அமைச்சு எண்ணம் கொண்டுள்ளது.
இது கற்றல்-கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதுடன், இலக்கவியல் கல்வியை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமையும் என, அமைச்சர் FADHLINA SIDEK குறிப்பிட்டார்.
முன்னோடித் திட்டமாக, இந்த ஆண்டு, 27 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
2030-ஆம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அது முழுமையாக செயல்படுத்தப்படும்.
மாணாக்கரின் கற்றலை வலுப்படுத்துவதோடு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வழிகோலும் என, அமைச்சர் விவரித்தார்.
அதற்காக, GOOGLE, MICROSOFT, APPLE, INTEL, HUAWEI, SAMSUNG, MDEC - மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகம் உட்பட,
24 முதன்மை தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.கற்பித்தலில் ஆசிரியரே முதன்மை பங்கு வகிப்பார்;
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் ஆசிரியரின் பணியை இலகுவாக்கத் துணை புரியும்.
குறிப்பாக, மாணாக்கரின் செயல்திறனை பகுப்பாய்வு செய்யவும், மேம்பட்ட கற்றல் அணுகுமுறையை வழங்கவும் அது பயன்படும்.
அதனால், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பில் எந்த பாதிப்பும் நேராது எனும் உத்தரவாதத்தையும் FADHLINA அளித்தார். Admin-Sabthams TV