Kota Bahru,29 January
அதன் அமலாக்கச் செயல்திறனை உறுதிச் செய்ய, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் ANTHONY LOKE கூறினார்.
நடப்பில், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தண்டத்தை செலுத்தும் அந்நிய வாகனமோட்டிகள்,50 விழுக்காடு வரையில் சலுகையைப் பெற தகுதி பெறுகின்றனர்.
இருப்பினும் எதிர்பார்க்கப்படும் பலனை இது அளிக்காவிடில், அமைச்சு இந்த அணுகுமுறையை மறு ஆய்வு செய்யும் என அமைச்சர் கூறினார்.கிளாந்தான் கோத்தா பாருவில் BAS DOT MY KOTA BHARU பேருந்துச் சேவையைத் தொடக்கிவைத்த பின், ANTHONY LOKE செய்தியாளர்களிடம் பேசினார்.
நேற்று, நான்கு மாநிலங்களின் எல்லைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாய்லாந்து வேன்கள் இயங்குவது கண்டறியப்பட்ட நிலையில்,ஒவ்வொரு வாகனமும் மாதத்திற்கு 30 ஆயிரம் ரிங்கிட் வரை லாபம் ஈட்டுவதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தென் தாய்லாந்தில் இருந்து பயணிகளை ஏற்றி வரும் இந்த வேன்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு முதல் ஜோகூர் வரையில் பயணிப்பதாக கூறப்படுகிறது.ஒரு நபருக்கு 70 ரிங்கிட் முதல் 150 ரிங்கிட் வரையில் அவை கட்டணம் வசூலிப்பதாகவும் ஊடக தகவல் கூறுகிறது.
இதனிடையே, வேக கட்டுப்பாட்டு கருவி-SLD இல்லாமல் செயல்படும் பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதன் முதலாம் கட்டம் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி முடிவுற்றதைத் தொடர்ந்து, தற்போது அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பேருந்தின் அதிகபட்ச வேக வரம்பு 90 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஅந்த வேக வரம்பு பின்பற்றப்படுவதை உறுதி செய்யவே, SLD கருவிகள் கட்டாயமக்கப்படுவதாக, அமைச்சர் விளக்கினார்.
எனவே, தொடர்புடைய கருவியைப் பொருத்தாத புதிய பேருந்து மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாவர்.சுற்றுலா பேருந்துகள், விரைவு பேருந்து உள்ளிட்டவை அதிலடங்கும் என LOKE விவரித்தார்.
விரைவு பேருந்துகளை உட்படுத்திய விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக LOKE கூறினார்.admin:sabtahmstv