Thursday, 16 April 2026

TAN SRI MOHD ISA ABDUL SAMAD-க்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை...

Kuala Lumpur February 10

சரவாக், கூச்சிங்கில் MERDEKA PALACE HOTEL SUITES-ஐ வாங்குவதில், முப்பது லட்சம் ரிங்கிட் ஊழல் புரிந்ததாக, அவர் மீது சுமத்தப்பட்டிருந்த ஒன்பது குற்றங்கள், மெய்ப்பிக்கப்பட்டன.

DATUK NORDIN HASSAN தலைமையிலான கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்டக் குழு, அரசுத் தரப்பின் இறுதி மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, ஒருமித்த மனதுடன் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, இன்று தொடங்கி சிறை தண்டனை அனுபவிக்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது.

ஐந்தாண்டுகளுக்கு முன், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றசாட்டுகளும் மெய்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,

நெகிரி செம்பிலானின் அந்த முன்னாள் மந்திரி புசாருக்கு, 54 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடியே 54 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் தண்டமும் விதிக்கப்பட்டது.

எனினும், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஒரு சேர அனுபவிக்கும் விதமாக, தண்டனை காலம் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.admin:sabthamstv