Kuala Lumpur February 10, 2026
கடந்தாண்டு, உலர்ந்த பொருள்களுக்கும் அடிப்படைப் பொருள்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுதப்பட்டதாக, பொருளாதார ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் AHMED RAZMAN ABDUL LATIFF தெரிவித்தார்.
ரமதான் மாதத்தின் போது வீடுகளில் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் பயன்பாடு அதிகம் இருக்கும்.
அதனைக் கருத்தில் கொண்டு, அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது.
இந்த உறையவைக்கப்பட்ட உணவு பொருள்கள், எடையிடப்பட்டு, தூய்மையாக பொட்டமிடப்பட்டவை.அவற்றின் விலையும்,பொட்டலங்களில்அச்சிடப்பட்டிருக்கும்.உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் எளிதில் கேட்டுப்போகாது.
எனவே, வர்த்தகர்களுக்கு பேரளவில் இழப்பை அவை ஏற்படுத்தது என, பேராசிரியர் DR AHMED கூறினார்.
அதேவேளையில், உறையவைக்கப்பட்ட உணவு பொருள்களை மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடும்.
ஆகையால், SARA திட்டத்தில் அவை சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது என பேராசிரியர் DR AHMED தெரிவித்தார்.
அதோடு ரமதான் காலத்தில், மக்கள் பொருள்களை வாங்க SARA உதவித்தொகையைப் பயன்படுத்தி வருகின்றனர்.admin:sabthamstv