Thursday, 16 April 2026

நாளை தொடங்கி கட்டம் கட்டமாக மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 Kuala Lumpur February 10

ஜொகூர், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில், நாளை தொடங்கி கட்டம் கட்டமாக மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடும் வெப்பத்தினால், அங்குள்ள அணைக்கட்டுகளில் நீரின் அளவு குறைந்துள்ளதைத் தொடர்ந்து,

அந்த முடிவு எட்டப்பட்டதாக துணைப்பிரதமர் DATUK SERI DR AHMAD ZAHID HAMIDI கூறினார்.

தொடர்புடைய அணைக்கட்டுகளில் நீர்மட்டம் தற்போது எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளது.

நிலைமை மோசமடையும் வரை காத்திராமல், நீர் மட்டத்தைச் உயர்த்த, உரிய நடவடிக்கை எடுப்பத்தில் தீவிரம் காட்டப்படுவதாகவும் துணைப்பிரதமர் தெரிவித்தார்.நாட்டில் தற்போது மேற்கு பருவக்காற்று பருவம் நிலவுகிறது.

அதனால், இப்போது மேக விதைப்பு மேற்கொண்டால், சாதகமானப் பலனைக் கொண்டுவரும் என, NADMA அறிவிvuறுத்தியுள்ளதை, DATUK SERI DR ZAHID சுட்டினார்.

ஜோகூரில் உள்ள UPPER LAYANG, PULAI 1 , MACHAP ஆகிய அணைக்கட்டுகளில், நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை, மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதே வேளை, பேராக்கில் உள்ள BUKIT MERAH அணைக்கட்டு மற்றும் கெடாவில் உள்ள PEDU, MUDA, AHNING ஆகிய அணைக்கட்டுகளில், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில்kalil மேக விதைப்பு நடைபெறும்.admin:sabtham'sTv