Thursday, 16 April 2026

பல இன-சமய மக்களைக் கொண்ட மலேசியாவில், சமுதாய நலன் தொடர்ந்து காக்கப்பட வேண்டும்.

கோலாலம்பூர், பிப் 17.- 

அதனை முன்னிறுத்தும் முயற்சியில், கண்டிப்பான சில அணுகுமுறைகளைத் தமது தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருப்பதாகப் பிரதமர் கூறினார்.

குடிமக்கள் சண்டையிட்டுக் கொண்ட எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை என்பதை, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுபடுத்தினார்.

இன-சமய விட்டுக் கொடுக்கும் போக்கு எல்லா தளங்களிலும் முன்னிறுத்தப்பட வேண்டும்.

தவறினால், நாட்டில் பூசல்கள் அதிகரிக்கக் கூடும் என பிரதமர் எச்ச்சரித்தார்.

பல இன மக்களுக்கு இடையே இதுகாறும் நீடிக்கும் ஒத்துழைப்பின் பலனாகவே,

மலேசியா பெருமைபடத்தக்க முன்னேற்றத்தை எட்டியிருப்பதாக, பொருளாதாரத் தரவுகள் சுட்டுகின்றன.

நாடு அமைதியாக இருப்பதாலும், மக்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வு தொடர்வதாலும், மலேசியாவை மாண்புறச் செய்ய அனைவரும் உழைப்பதாலும் இந்த வெற்றி கிட்டியது.

அதேவேளை, வெற்றியை வேண்டுவோர், சிக்கல்களை எதிர்கொள்ளவும், வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளவும், மலேசிய குடும்பமாக சிக்கல்களுக்கு இணைந்துத் தீர்வு காணவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என, பிரதமர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன அவை மண்டபத்தில், 2025 சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று டத்தோஸ்ரீ அன்வார் உரையாற்றினார்.admin@sabthamstv.