கோலாலம்பூர், பிப் 17:-
அதனைப் புதுப்பிக்கும் முனைப்புகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.
கோலாலம்பூர்-சீன அவை மண்டபம், வரலாற்று-பாரம்பரியக் கட்டடமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், புதுப்பிப்புப் பணிகள் அமைய வேண்டும் என, பிரதமர் வலியுறுத்தினார்.
சீன assembly மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணிகளை, Kuala Lumpur மாநகர் தலைவர் Datuk Fadlun Mak Ujud-இன் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு, பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் HANNAH YEOH-வை அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த எண்ணத்துக்கு வடிவம் தர, தொடர்புடைய எல்லா செயற்குழுக்களுடனும் ஒரே மேசையில் அமர்ந்து கலந்தாலோசிக்கும்படி, சுற்றுலா-கலை-பண்பாட்டு அமைச்சர் Datuk Seri Tiong King Sing-க்குப் பிரதமர் உத்தரவிட்டார்.
அந்த மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணிக்கான எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசு ஒத்துழைப்பு நல்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வரலாற்றுக் கட்டமான அதனைப் பேணும் கடப்பாடு அரசுக்கு உண்டு.
அதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
1910-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீன assembly மண்டபக் கட்டுமானம், 1923-இல் நிறைவடைந்தது.
மலேசியாவில் உள்ள சீன சமூகத்தின் நலனைக் காக்கும், குறிப்பாக, பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளைப் பேண, அந்த மண்டபம் தோற்றுவிக்கப்பட்டது. admin@sabthamstv.