Thursday, 16 April 2026

நாட்டின் பல இன மக்களும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

கோலாலம்பூர், பிப் 17

குடிமக்கள் இடையே ஒருமைப்பாட்டு ஓங்கியிருப்பதற்கான சான்றாக இது விளங்குகிறது என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பெருமைபட கூறினார்.

விஸ்மா எம்.சி.ஏ-வில் நடைபெற்ற ம.சீ.ச. ஏற்பாட்டிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, பிரதமர் பேசினார்.

இது போன்ற பண்டிகைகள், மலேசியர்கள் எல்லாராலும் கொண்டாடப்படுவதைத் தமது பங்கேற்பு எடுத்துக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

அந்தக் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக இருந்ததாகவும், நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டு எடுத்துரைப்பதாகவும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு கொண்டாடப்படும் குதிரை ஆண்டு, வலிமை மற்றும் ஆற்றலின் சின்னமாக விளங்குகிறது.

அவ்வகையில், பொருளாதார வளர்ச்சியையும் நாட்டின் மேம்பாட்டையும் அது உந்தச் செய்யும் என, பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

குதிரை ஆண்டு எல்லாருக்கும் வளப்பத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் தமதுரையில் வாழ்த்தினார். admin@sabthamstv.