ஜொகூர் மாநில அரசின் துறைகள், நிறுவனங்கள் அனைத்தும் அதனை மேற்கொள்ள வேண்டும்.
பேரரசர் SULTAN IBRAHIM, அந்த ஆணையைப் பிறப்பித்தார்.
ஜொகூரில் மக்கள் நல்வாழ்வும் வளப்பமும் தொடர்ந்து பேணப்பட வேண்டும்.
நிர்வாகத்தில் உயர்நெறியும், வெளிப்படைத் தன்மையும் அதற்கு அடிப்படையாக விளங்குவதாகப் பேரரசர் குறிப்பிட்டார்.
ஜொகூர் MENTERI BESAR -DATUK ONN HAFIZ GHAZI-ஐயும் மாநில அரசு செயலாளர் DATUK MOHAMMED RIDHA ABD KADIR-ஐயும் PASIR PELANGI அரண்மனையில் சந்தித்த போது, சுல்தான் இப்ராஹிம், இதனை வலியுறுத்தினார்.
அந்தத் தகவல், பேரரசரின் FACEBOOK பக்கம்- SULTAN IBRAHIM SULTAN ISKANDAR-இல் பகிரப்பட்டுள்ளது.
ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்தச் சந்திப்பில், ஜொகூர் அடைந்திருக்கும் அபரிமிதமான முன்னேற்றம், மாநிலத்தின் அண்மைய நடப்புகள் குறித்து DATUK ONN HAFIZ, பேரரசரிடம் விளக்கினார்.admin@sabthamstv