KUALA LUMPUR FEB 18
எஞ்சியுள்ள 15 விழுக்காட்டினர் வெளிநாட்டவர் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெளிவுபடுத்தினார்.
சுகாதார அமைச்சின் தரவுகள் படி, மலேசியர்கள் அதிகமானோர், TIBI தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
எனவே, வெளிநாட்டினரை, நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதால் தான் காசநோய் திரள்கள் அதிகம் பரவுவதாக கூறப்படுவது அடிப்படையற்ற தகவல், என அமைச்சர் விளக்கினார்.
நமது சமூகத்தினரிடையே காசநோய் தொற்று பரவுவதை, நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, வெளிநாட்டினரைக் குறைக் கூறிக்கொண்டு கொண்டு, உள்நாட்டு சுகாதார நிலவரத்தை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தமது FACEBOOK பதிவில் DATUK SERI DR DZULKEFLY இடுகையிட்டுள்ளார்.
பொது சுகாதாரத்திற்கு மருட்டல் விளைவிக்கும் நோய்களில், காச நோய்ப் பரவல் புதிதன்று.
மாறாக, நீண்ட காலமாக, அந்தத் தொற்று அவ்வப்போது சமூகத்தில் பரவுவது நாம் அறிந்ததே.
அனைத்து தரப்பின் கவனம் தேவைப்படும் உள்நாட்டு தொற்று பரவலாக காச நோய் வகைப்படுத்தப்பட்டுள்ளதை, அமைச்சர் சுட்டினார்.
மேலும், காச நோய் வெறும் மருத்துவ ரீதியாக ஏற்படும் தொற்று கிடையாது.
மாறாக, ஒருவர் வாழும் சூழல், சமூகப் பொருளாதாரம், ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்று கண்டவருடனான அணுக்க தொடர்பு ஆகிய காரணங்களாலும் அது பரவக்கூடும் என, DATUK SERI DR DZULKEFLY விவரித்தார்.