Thursday, 24 September 2026

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் ரமணன் கொண்டு செல்கிறார்

சுங்கை பூலோ, மார்ச் 10 – 
நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பான விவகாரம் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

"நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நான் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்வேன். இது குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும்," என்று அவர் கூறினார்.admin@sabthmstv