Thursday, 16 April 2026

கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப் பொருள்களைப் பதப்படுத்தி விற்கும் கும்பலின் நடவடிக்கை களை அரச மலேசிய போலீஸ்படை முறியடித்தத

 கோலாலம்பூர்,டிசா 20, கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப் பொருள்களைப் பதப்படுத்தி விற்கும் கும்பலின் நடவடிக்கை களை அரச மலேசிய போலீஸ்படை முறியடித்தது! அதிரடிச்சோதனையில், 18 TAN-க்கும் மேற்பட்டபோதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, BUKIT AMAN போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK HUSSEIN OMAR KHAN தெரிவித்தார்.

 இம்மாதம் 16-ஆம் நாள், கிள்ளான் பள்ளத்தாக்கில், சட்டவிர ோத ஆய்வுக்கூடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் COCAINE, MDMA, KETAMIN போன்ற போதைப்பொருள்களைத் தயாரித்து விற்றதாக ஐயுறப்படும் அறுவர் கை து  செ ய்யப்பட்டனர்.போலீசின் பிடியில் சிக்கிய மூன்று உள்நாட்டு ஆடவரும் மூன்று அந்நிய நாட்டு பெ ண்களும், 24 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் என,தொடக்க புலனாய்வில் தெரிய வந்ததது.

அந்த அதிரடிச் சோதனை யில், 3 கிலோகிராம் எடை யிலான MDMA, 4 TAN எடைக கொண்ட COCAINE, 14.4 TAN எடை யிலான KETAMIN உட்படதிரவ வடிவிலான போதை ப்பொருள்களும், அவற்றை தயாரிக்கும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவை சட்டவிரோதமாக விற்கப்பட்டால், 6 க ோடியே 85 லட்சம் பே ரின் நல்வாழ்வு குலை யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 1952 ஆபத்தான ப ோதை பொருள் சட்டம் பிரிவு 39B-இன் கீழ் இந்தச் சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் 18-ஆம் நாள் வரை , அரச மலேசியபோலீஸ்படையின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை , நாடு முழுதும், 609 சோதனை களை மேற்கொண்டது. அவற்றின் மூலம், 300 கோடியே 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான, 215 TAN போதை ப்ப ொருள்கள் பறிமுதல் செ ய்யப்பட்டன. மேலும், 270 கும்பல்களின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதோடு, 737 பேர்

கைது செய்யப்பட்டனர் 19 சட்டவிரோத ஆய்வுக்கூடங்கள் இயங்குவதும் அம்பலமானது. மே லும், 14 க ோடியே 10 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டதாக, DATUK HUSSEIN OMAR KHAN குறிப்பிட்டார்.Admin-Sabthams TV

கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப் பொருள்களைப் பதப்படுத்தி விற்கும் கும்பலின் நடவடிக்கை களை அரச மலேசிய போலீஸ்படை முறியடித்தது! அதிரடிச்சோதனையில், 18 TAN-க்கும் மேற்பட்டபோதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, BUKIT AMAN போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK HUSSEIN OMAR KHAN தெரிவித்தார்.