
கோலாலம்பூர்,டிசா 20 தேசிய முன்னணியில், ம.இ.கா.வின் நிலை என்ன? அடுத்தாண்டு நடைபெ றவிருக்கும் BARISAN NASIONAL உச்சமன்றக் கூட்டத்தில், அது குறித்து விவாதிக்கப்படும். ஆயினும், ஜனவரியில் நடை பெ றும் அம்னோ பேரவையில் அது பற்றி பே சப்படாது என, தே சிய முன்னணி தலை வர் DATUK SERI DR AHMAD ZAHID HAMIDI கோடிகாட்டினார்.

தேசிய முன்னணியில் நிலைப்பதா, நீடிப்பதா எனும் முடிவை ஒத்திவைப்பதாக, ம.இ.கா.வின் 79-ஆம் பேரவையில், அறிவிக்கப்பட்டது. ஆயினும், தேசிய முன்னணியில் இருந்து ம.இ.கா. வெளியேறுவது தொடர்பான மூன்று தீர்மானங்களும் பேராளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவு, மத்தியசெயற்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும்,கட்சியின் தேசியத் தலை வர் Tan Sri S. A Vigneswaran கூறியிருந்தார்.Admin -Sabthams TV