கோலாலம்பூர், டிச 20,தகவல் அறிந்த, ஒற்றுமையான சமூகத்தை, றது. உயர்நெறியைப் பேணவும், கலாச்சாரங்களின் பாலமாகவும் விளங்கும் ஊடகம் மலேசிய மதானி இலக்கை அடைய அரசின் வியூக பங்காளியாகவும் செயல்படுவதாக பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM குறிப்பிட்டார்.
ஊடகத்தின் வாயிலாகவே மக்கள் அரசின் நல்லாட்சியையும் அதன் வெளிப்படைத்தன்மையையும் அறிகின்றனர். தகவல் பகிர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஊடகவியலாளர்கள் அயாரது தொடர்வதாக DATUK SERI ANWAR பாராட்டுகளைத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் எல்லையற்ற தகவல் தொடர்பை உள்ளடக்கிய தொழில் நுட்பயுகத்தில் மக்களுக்கு பொறுப்பான முறையில் செய்திகளைக்கொண்டு சேர்க்கும் கடப்பாட்டை ஊடகம் கொண்டுள்ளது. குறிப்பாக, மாந்த பண்புகளை எடுத்துரைக்கும் செய்திகள், உண்மை மற்றும் நீதியை நிலை நிறுத்தும் தகவல்களை கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்கள் உலகிற்கு தே வை என பிரதமர் வலியுறுத்தினார். பினாங்கு-GELUGOR-ரில் நடை பெ ற்ற உலக சீன மொழி பத்திரிக்கை கழகத்தின் 58-ஆம் ஆண்டு மாநாட்டில் DATUK SERI ANWAR உரை யாற்றினார்.Admin-SabthamsTV