Thursday, 16 April 2026

கடந்த செப்டம்பர் 30 முதல் இதுவரை செயல்படுத்தப்பட்டு வரும் முன்னெடுப்பின் வாயிலாக எட்டு கோடி ரிங்கிட்டை அரசு BUDI MADANI

கோலாலம்பூர், டிச 21, கடந்த செப்டம்பர் 30 முதல் இதுவரை செயல்படுத்தப்பட்டு வரும் முன்னெடுப்பின் வாயிலாக எட்டு கோடி ரிங்கிட்டை அரசு BUDI MADANI RON95மிச்சப்படுத்தியுள்ளது.

மலேசியர்கள் பயனடையும் வகையில் கையாளப்பட்ட இந்த முன்னெடுப்பால் இந்தத் தொகை மிச்சப்படுத்தப்பட்டதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.

இந்த முன்னெடுப்பின் வாயிலாக 35 இலட்ச வெளிநாட்டவரை உள்ளடக்கிய நிதிக் கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு,

வெளிநாடுகளுக்கு எரிபொருள் கடத்தப்படும் சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை பிரதமர் சுட்டினார்.

இலக்கிடப்பட்ட உதவித்தொகை செயலாக்கத்தின் வழி மிச்சப்படுத்தப்பட்ட நிதியானது, ரஹ்மா உதவித் திட்டத்தின் வாயிலாக மக்களுக்கே திரும்ப செலுத்தப்படும் என்றாரவர்.

அதோடு கிளினிக்குகள்,மருத்துவமனைகளை தரமுயர்த்துதல், சாலைகளை செப்பனிடுதல் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எரிபொருள் மீதான இலக்கிடப்பட்ட உதவித் தொகை குறித்து முந்தைய அரசுகள் விவாதித்து வந்ததன.

ஆனால், மதானி அரசு துணிச்சலாக BUDI95 திட்டத்தை நடைமுறைப்படுத்தியது குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.Admin -Sabthams TV