Thursday, 16 April 2026

2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட மலேசிய இந்திய சமூக நடவடிக்கை பெருந்திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும்.

கோலாலம்பூர், டிச 21

2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட மலேசிய இந்திய சமூக நடவடிக்கை பெருந்திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும்.

இந்திய சமூகத்தில் நிலவும் நகர்புர ஏழ்மை, கல்வி, வேலை வாய்ப்பு சிக்கல்களைக் களைய, ஒருமைப்பாட்டு அரசாங்கம் அதனைச் செயல்படுத்த வேண்டும் என, துணைப்பிரதமர் DATUK SERI AHMAD ZAHID HAMIDI கேட்டுக்கொண்டார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17-ஆம் ஆண்டுப் பேரவையைத் தொடக்கிவைத்து, DATUK SERI AHMAD ZAHID உரையாற்றினார்.

தேசிய முன்னணித் தலைவர் எனும் முறையில், அந்த நடவடிக்கைத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார்.

இந்திய சமூக விவகாரத்துக்குப் பொறுப்பேற்றிருக்கும் மனித வள அமைச்சர் DATUK SERI R. RAMANAN,

நாடளாவிய நிலையில், அந்தத் திட்டத்தைச் செயலாக்கும் முனைப்பை மேற்கொள்ள வேண்டும் என, அவர் கேட்டு கொண்டார்.

அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பேச ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்திய சமூகத்தில் அதிகரித்துவரும் நகர்புர ஏழ்மை விவகாரத்துக்கு உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும்.

பள்ளிப்படிப்பைக் கைவிட்டோர், வேலை கிடைக்காதோருக்கு வழிகாட்டும் வகையில், திறன்கல்வி-தொழில்பயிற்சி வழங்கவும், தேசிய TVET மன்றத் தலைவருமான DATUK SERI AHMAD ZAHID உறுதியளித்தார்.Admin-Sabthams TV