Thursday, 16 April 2026

மறுத்தோற்றத்துக்கு ஆயத்தமாக இருக்கிறது, தேசிய முன்னணி!

கோலாலம்பூர், டிச 22-

மறுத்தோற்றத்துக்கு ஆயத்தமாக இருக்கிறது, தேசிய முன்னணி!

1974 தொடங்கி பாரம்பரியமாகப் பேணப்பட்டு வரும் கட்டமைப்புக்கு மாற்றாக, புத்துணர்ச்சிமிக்க அரசியல் வடிவத்தை உருவாக்க பாரிசான் நேஷனல் விரும்புவதாக, அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தேசிய முன்னணிக்கு மறுத்தோற்றம் அளிக்கும் பரிந்துரை, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதன் உச்சமன்றக் கூட்டத்தில் அதிகாரப்படியாக விவாதிக்கப்படும்.

BARISAN NASIONAL கட்சி அமைப்பு விதிப்படி, உறுப்புக் கட்சிகளின் ஒருமித்த ஒப்புதலின் அடிப்படையிலேயே பெரிய மாற்றங்களைச் செய்ய இயலும்.

எனவேதான், அந்தக் கூட்டத்தில் அவ்விவகாரம் விவாதிக்கப்படும் என, துணைப்பிரதமர் விவரித்தார்.நடப்பில் இருக்கும் கூட்டணிக்கு மாற்றாகப் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

தேசிய முன்னணி தொடர்ந்து ஏற்புடைய, ஆற்றல் கொண்ட, அனைத்தையும் உள்ளடக்கிய, குறிப்பாக, உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான உறவைக் கையாளக் கூடிய வகையில், அந்த மாற்றம் இருக்கும் என்றும் அவர் கோடிகாட்டினார்.

அந்த மாற்றம் நிகழும் வரை, FRIENDS OF BN-இல் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் பொறுமையைக் கடைபிடித்து,

விசுவாசத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அம்னோ தலைவருமான அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17-ஆம் ஆண்டுப் பேரவையைத் தொடக்கிவைத்த பின், டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஊடகத்தாரிடம் பேசினார்.Admin -Sabthams TV

 

மற்ற Politics