Thursday, 16 April 2026

2026-இல் இணையச் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தப்படும்.

கோலாலம்பூர், டிச 20

2026-இல் இணையச் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தப்படும்.

மக்களின் வளப்பதை வலியுறுத்தும் மடானி அரசாங்கத்தின் அவாவுக்கு ஏற்ப அது அமையும் என தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் கூறினார்.

அரசாங்கத் தகவல் அணுகுமுறை ஆக்கப்பூர்வமாக செயல்படுவதையும் தொடர்பு அமைச்சு கவனத்தில் கொள்ளும்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறாரையும், இளையோரையும் தவிர, பெற்றோரையும், சமூகத்தினரையும் இலக்கிட்டு 2.0 இணைய பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலக்கவியல் பாதுகாப்பு தொடர்பான முழுமையான புரிதலை வழங்குவதற்காக நாடு முழுவதும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும்.

இணைய பகடிவதை, இணைய மோசடி ஆகியவற்றில் இருந்து சிறாரைப் பாதுகாப்பதில் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்தும் இதில் எடுத்துரைக்கப்படும்  என டத்தோ பாஹ்மி சுட்டிக்காட்டினார்.Admin-Sabthamstv