KAJANG, டிசா 22, சிறைக்குத் திரும்பினார் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். எஞ்சிய தண்டனைக் காலத்தை இல்லத்தில் கழிக்க வகை செய்யும், இணை ஆணை தொடர்பான அந்த முன்னாள் பிரதமரின் சீராய்வு மனுவை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2024 ஜனவரி 29-ஆம் நாள் நடைபெற்ற 61-ஆம் பொது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், டத்தோஸ்ரீ நஜிப்பை, வீட்டுக் காவலில் வைக்கும் விவகாரம் விவாதிக்கப்படவில்லை; முடிவெடுக்கப்படவும் இல்லை.
அதன் அடிப்படையில், அவரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக, நீதிபதி எலீஸ் லோக் யீ சிங் தெரிவித்தார். இருந்ததாகக் கூறப்படும் இணை ஆணை சட்டத்துக்குப் புறம்பானது என்றும், அதனைச் செயல்படுத்தவியலாது என்றும், நீதிமன்றம் அறிவித்தது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், டத்தோஸ்ரீ நஜிப், எஞ்சிய தண்டனைக் காலத்தையும் காஜாங் சிறையிலேயே கழிக்க நேரிடுகிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்படும் என, டத்தோஸ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் தான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்தார். Admin-Sabthams TV