Thursday, 16 April 2026

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவல்...

கோலாலம்பூர், டிச.23- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவல் இணை ஆணை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை, எல்லா தரப்புகளும் மதிக்க வேண்டும்.  நிலைமை மோசமடையாதிருக்கவும், பதற்றத்தைத் தவிர்க்கவும், அது மிக அவசியம் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மக்கள் அனைவரும் நீதிபதியின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்.

குறிப்பாக, பேரரசரின் மன்னிப்பு மட்டுமன்றி, மேல்முறையீடு செய்ய நடப்பில் உள்ள சட்ட வழிகளைத் தொடர்புடைய தரப்பு பயன்படுத்தலாம் எனும் ஆலோசனையை ஏற்க வேண்டும் என, பிரதமர் கேட்டுக் கொண்டார்.

எல்லா தரப்புகளும் இந்த விவகாரத்தை பொறுமையுடனும் அறிவுப்பூர்வமாகவும் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதிலும், அதிகார இடையூறுகளைத் தடுப்பதிலும் மதானி அரசு இன்னமும் திடமாக இருப்பதைப் பிரதமர் சுட்டினார்.

நீதித் துறை அந்நியத் தலையீடுகளுக்கு அப்பால் இயக்க வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ அன்வார், முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

வீட்டுக் காவல் தொடர்பிலான இணை ஆணையை சீராய்வு செய்யக் கோரும் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனுவை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

அது சட்டப்பூர்வமற்ற ஆவணம் என்றும், அதனைச் செயல்படுத்த இயலாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டத்தோஸ்ரீ நஜிப் எஞ்சிய தண்டனைக் காலத்தைச் சிறையில் கழிக்கவும், அந்தத் தீர்ப்பு வகை செய்கிறது. Admin-sabthamstv.