Thursday, 16 April 2026

மதியிறுக்கச் சிறுவன் ஸய்ன் ரய்யான் அப்துல் மத்தின் மரணம் தொடர்பான வழக்கு:

ஷா ஆலாம்,  டிச 23 - மதியிறுக்கச் சிறுவன் ஸய்ன் ரய்யான் அப்துல் மத்தின் மரணம் தொடர்பான வழக்கு:

தமக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு சிறுவனின் தாய் விடுத்த முறையீட்டு மனுவை, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகனைப் பொருட்படுத்தாது, மரணம் விளையும் வகையில் அலட்சியமாக இருந்ததால், 30 வயது இஸ்மானிரா அப்துல் மனாப்-க்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, கடந்த மாதம் 19-ஆம் நாள் இஸ்மானிரா முறையீடு செய்தார்.

அது மீதான செவிமடுப்பு இன்று நடைபெற்ற நிலையில்,

அவரின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதற்கான முகாந்திரம் இல்லை என, நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின் தீர்ப்பளித்தார்.

குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 31-ஆம் நாள், பெட்டாலிங் ஜெயா செஷ்யன் நீதிமன்றம், இஸ்மானிரா-வுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.

அத்துடன், ஈராண்டு நன்னடத்தைப் பிணையிலும் இஸ்மானிரா, உள்நாட்டினர் ஒருவரின் உத்தரவாதம், மூவாயிரம் ரிங்கிட் பிணை ஆகியவையும் அவருக்கு விதிக்கப்பட்டது.

சிறை தண்டனை முடிந்து ஆறுமாதக் காலத்துக்குள், 120 ,மணி நேரம் சமூகச் சேவையில் ஈடுபடவும், இஸ்மானிராவுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டது.Admin-sabthamtv.