கோலாலம்பூர், டிச 23 - நாட்டில் தொழில்நுட்ப-இலக்கவியல் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
மலேசியாவின் வலுவான இலக்கவியல் அடிப்படை வசதிகளும், அரசியல் நிலைத்தன்மையும் அரசின் கொள்கைகளும் அதற்கு ஊக்கமளித்ததாக.
தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பட்சில் உவகை தெரிவித்தார்.
வலுவான தொழில்நுட்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில், தேசிய இலக்கவியல் கட்டமைப்பு அடிப்படை வசதி முன்னெடுப்பு-ஜெண்டேலா வெற்றி கண்டுள்ளது.
அதன் அடிப்படையில், தரவு மையம் உள்ளிட்ட இலக்கவியல் முதலீடுகளை ஈர்ப்பதில் மலேசியா முக்கிய இலக்காகத் திகழ்வதாக, அமைச்சர் கூறினார்.
ஜெண்டேலாவின் முதல் மற்றும் இரண்டாம் கட்டத் திட்டங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட கண்ணாடியிழை முன்னெடுப்பு, அசாதாரணமான பலனைக் கொண்டுவந்துள்ளது.
அத்துடன், 5G தொழில்நுட்பத்துக்கு நாடு மாறுவதற்கான ஆயத்தப் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன.
இதன் அடிப்படையில், இணைய பாதுகாப்பு நிறுவனம் உட்பட அனைத்துலக தொழில்நுட்ப நிறுவனங்கள் அவற்றின் வட்டார நடவடிக்கை மையத்தை மலேசியாவில் திறந்துள்ளன.
மலேசியாவின் நடுநிலை அரசியல் நிலைப்பாடும், மதானி அரசின் வலுவான நிர்வாகமும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை மேம்படுத்தியிருப்பதாக, டத்தோ பாஹ்மி குறிப்பிட்டார். Admin-sabthamstv.