ஜொகூர் பாரு, டிச.23: ஜொகூரில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் நிதிச் சுமையைக் குறைக்க 500 ரிங்கிட் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அவர்களின் அர்பணைப்பையும் பங்களிப்புகளையும் பாராட்டும் வகையில் இது அமைந்துள்ளது.
பள்ளி விடுமுறை காலத்தின் போது நல்கப்படும் இந்த உதவி தொகை பயனுள்ளதாக அமைகிறது என மக்கள் சிலர் உவகை தெரிவித்தனர்.
அதோடு, தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த உதவியாக உள்ளது எனவும் அவர்கள் கருத்துரைத்தனர்.
2026 ஜொகூர் வரவுசெலவுத் திட்டதில் 7 கோடியே ஒரு லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
அதில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
Admin-sabthamtv.