பினாங்கு, டிச 23 - "22 லட்சம்" ! கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி இறுதித் தவணை விடுமுறையை முன்னிட்டு பினாங்கு மாநிலத்திற்குள் அவ்வெண்ணிக்கையில் வாகனங்கள் நுழையக் கூடும் என கணிக்கப்படுகிறது
மேலும் அம்மாநிலத்தில் இம்மாதம் ஆறாம் தேதி தொடக்கம் கண்ட பினாங்கு விழா அடுத்தாண்டு ஜனவரி பத்தில் நிறைவை தொடுகிறது.
ஆதலால் மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடக்கலாம் என பினாங்கு மாநிலத் தலைவர், டத்தோ அஸ்ஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.
பண்டிக்கை கால உச்ச நேரத்தில் வாரத்திற்கு இருபது லட்சம் வாகனங்கள் முதன்மை நெடுஞ்சாலைகளை கடக்கலாம் என அரசு போலீஸ்ப்படை முன்னதாகக் கணித்திருக்கிறது. Admin-sabthamstv.