Thursday, 16 April 2026

வடிகால்-நீர்பாசனத் துறை 149 வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியது.

கோலாலம்பூர், டிச.29-

வடிகால்-நீர்பாசனத் துறை 149 வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியது. 17 லட்சம் பேர் அதன் வாயிலாகப் பாதுகாப்பு பெற்றனர்.

2024 தொடங்கி 2025 வரை, எரியாற்றல் மாற்ற-நீர்வள உருமாற்ற அமைச்சு வாயிலாக மதானி அரசு எட்டிய அடைவுநிலை அதுவென, துணைப்பிரதமர் DATUK SERI FADILLAH YUSOF தெரிவித்தார்.

தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் வியூக ஒத்துழைப்பு வாயிலாக ஊக்கமளிக்கும் அந்த அடைவுநிலை எட்டப்பட்டது.

நாட்ட்ன் நீர்வள-எரியாற்றல் துறையை வலுப்படுத்தும் முயற்சியில், எட்டப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க அடைவுநிலை அது.

அத்துடன், மக்கள் நல்வாழ்வு, அடிப்படை வசதி பாதுகாப்பு, ஆகியவற்றுடன் நாட்டின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் அது முக்கிய பங்களித்திருப்பதாகத் துணைப்பிரதமர் கூறினார்.

தேசிய நீர்சேவை ஆணையம் செயல்படுத்தும் நீர் பொருள் விவேகத் திட்டம் வாயிலாக, நீர் பயன்பாடு 85 விழுக்காடு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

எரியாற்றல் துறையைப் பொருத்தவரை, எரியாற்றல் ஆணையம், MYPOWER வாயிலாக முதன்மை அடைவுநிலை எட்டப்பட்டது.

எரியாற்றல் மாற்ற-நீர்வள உருமாற்ற அமைச்சருமான DATUK SERI FADILLAH, FACEBOOK-இல் இதனைப் பதிவேற்றியுள்ளார்.admin:sabthamstv