Thursday, 16 April 2026

வெள்ளப் பெருக்குச் சிக்கல் முற்றிலுமாகத் தீர்க்கப்பட வேண்டும்.

ஷா ஆலாம்,டிச.29-  

அந்த இலக்கை எட்டுவதற்கான தெளிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என, சிலாங்கூர் ஆட்சியாளார் SULTAN SHARAFUDDIN IDRIS SHAH வலியுறுத்தினார்.

வெள்ளச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முயற்சிகள், தற்காலிகமானவையாகவோ, காரணம் கூறும் வகையிலோ இருக்கக் கூடாது.

சிறந்த நிபுணத்துவத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நீண்ட காலத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என, சிலாங்கூர் சுல்தான் கேட்டு கொண்டார்.

உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிபுணத்துவம் அதில் பயன்படுத்தப்பட வேண்டும்.

திட்டங்களின் தோல்விக்குக் குடிமக்களின் துயரம் விலையாகக் கூடாது.

புயல், கடும் மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களை மாந்தர் தடுத்து நிறுத்தவியலாது.

ஆனால், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் தடுப்பதிலும் மாந்த ஆற்றல் முழுமையாகவும் நேர்மையாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என, சிலங்கூர் ஆட்சியாளர் அறிவுறுத்தினார்.

SELANGOR ROYAL OFFICE FACEBOOK பக்கத்தில், 2026 புத்தாண்டுச் செய்தியாக, SULTAN SHARAFUDDIN-இன் அந்த உரை பதிவேற்றப்பட்டுள்ளது. Admin:sabthamstv