Thursday, 16 April 2026

DESA PALMA அருகே உள்ள பகுதியில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிக் கருவியால் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்:

நெகிரி செம்பிலான்,Nilai-Dec-29

DESA PALMA அருகே உள்ள பகுதியில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிக் கருவியால் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்:

பயங்கரவாதக் கூறுகள் அதில் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக BUKIT AMAN குற்றப் புலனாய்வு இயக்குநர் DATUK M. KUMAR தெரிவித்தார்.

அது மிகவும் அரிதான நிகழ்வு;

குற்றக்கும்பல்களுக்கு அதில் தொடர்பில்லை என அவர் விளக்கினார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் வெடிக்கும் தன்மை உடையவை;

அது தொடர்புடையவர் வசம் இருந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் கோணத்தின் புலனாய்வு முடுக்கிவிடப்பட்டது.

அதை வைத்திருந்தவரது பின்னணியும் ஆராயப்படுகிறது.

அந்த வெடிப்புடன் தொடர்புடையவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடமிருந்து முழுமையான வாக்குமூலம் இன்னமும் பெறப்படவில்லை.

அந்த 62 வயது ஆண், அடுத்த மாதம் 3-ஆம் நாள் வரை, விசாரணைக்கு உதவும் பொருட்டுத், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.admin:sabthamtv