கோலாலம்பூர், டிச.30- ஊழலை ஒழிப்பதில் திடமாக இருக்கிறது, மதானி அரசு!அதில் ஒருபோதும் தயவு கட்டப்படாது.
நண்பர் என்றாலும் பகைவர் என்றாலும் நடவடிக்கை ஒன்றே என திட்டவட்டமாகக் கூறினார், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். .
நாட்டைக் காப்பாற்றவும், பொதுமக்கள் பணம் நேர்மையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை அரசு தொடரும்.
அதனை மேற்கொள்வதில் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அரசு அடிபணியாது என பிரதமர் சூளுரைத்தார்.
ஊழலை ஒழிக்க மதானி அரசு நெறிமுறைகளையும் நலம் பேணும் முயற்சிகளையும் வகுத்திருந்தாலும்,
இன்னமும் சிலர் பழைய பாழாய்போன பணிச் சூழலிலேயே சிக்கிக் கொண்டிருப்பதாக, டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.Admin:sabthamstv