கோலாலம்பூர், டிச.30- ஜனவரி முதலாம் நாள், அந்த பதவி விலகல் நடப்புக்கு வரும் என, ஓர் அறிக்கை வழி அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு PERIKATAN NASIONAL கூட்டணி அமைக்கப்பட்ட நாள் முதல் தமக்கு முழு ஆதரவை வழங்கிய கட்சியின் உச்சத் தலைவர்களுக்கு TAN SRI MUHYIDDIN நன்றி தெரிவித்தார்.
BERSATU தலைவருமான அவர் தமது பதவி விலகல் குறித்து எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
PN கூட்டணிக்கும், அதன் உறுப்பு கட்சிகளுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அந்த பதவி விலகலை BERSATU கட்சியின் தலைமைச் செயலாளர் DATUK SERI MOHAMED AZMIN ALI உறுதிபடுத்தினார்.
இதற்கிடையில், PERIKATAN NASIONAL தலைமை செயலாளர் DATUK SERI MOHAMED AZMIN ALI-யும் தமது பதவியை துறப்பதாக அறிவித்தார்.
TAN SRI MUHYIDDIN MOHD YASSIN- பதவி விலகலை அறிவித்த சில நிமிடங்களில்,
DATUK SERI MOHAMED AZMIN ALI-யின் பதவி விலகல் அறிவிப்பு அவரது அதிகாரப்பூர்வ FACEBOOK-கில் பதிவேற்றப்பட்டது.
தேசிய கூட்டணியின் தலைமைச் செயலாளராக தம்மை பொறுப்பில் அமர்த்தியது, TAN SRI MUHYIDDIN MOHD YASSIN,
ஆகையால், தாமும் பொறுப்பு துறக்க முடிவெடுத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, PERIKATAN NASIONAL சிலாங்கூர் மாநில தொடர்பு தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகுகிறார்.
அவ்விரு பதவி விலகலும், ஜனவரி முதல் தேதி அமலுக்கு வருகிறது.
இவ்வேளையில், ஜொகூர் - BUKIT KEPONG சட்டமன்ற உறுப்பினர் DATUK DR. SAHRUDDIN JAMAL-லும் மாநில PN பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். Admin:sabthamstv