Thursday, 16 April 2026

அடுத்தாண்டு பள்ளி தவணை தொடங்கி மாணவர்கள் கழுத்து பட்டை அணிவது கட்டாயமில்லை.

கோலாலம்பூர், டிச.30- இம்மாதம் 17-ஆம் நாள் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்று-அறிக்கையில் அந்த தளர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற 2025 கல்வியமைச்சின் சிறப்பு தொழில்முறை சந்திப்பில் அந்த முடிவு எட்டப்பட்டது.

புதிய வழிக்காட்டிக்கு ஏற்ப இனி மாணாக்கர் பள்ளிக்கு கழுத்து பட்டை அணிவது கட்டாயமில்லை.

நாட்டின் வெப்பமான வானிலை மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கழுத்து பட்டை அணிவதற்கு ஏற்புடையதாக இல்லை.

இது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலையும் பாதிப்பதாக கல்வியமைச்சு குறிப்பிட்டது.

ஆகையால், பள்ளி நிர்வாகம் இனி மாணவர்கள் கழுத்து பட்டையை அணிய கட்டாயப்படுத்த கூடாது.

புதிய பள்ளி தவணைக்கு முன்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிப் பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை கல்வியமைச்சு அறிந்துள்ளது.

இந்த அறிவிப்பால், பெற்றோரின் நிதிச் சுமையும் குறைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Admin:sabthamstv